மதுரை பொன்மேனி ஜே.டி. நகரை சேர்ந்தவர் டெய்சி (வயது 40), இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் நிர்வாகியாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் வெளியே சென்று விட்டார். அப்போது வீட்டிற்குள் வந்த மர்ம நபர்கள் பீரோவில் இருந்த ரூ.67 ஆயிரம், 2 கைக்கடிகாரங்கள், 2 செல்போன்கள் ஆகியவற்றை திருடி விட்டு தப்பிச் சென்றனர். இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.