மளிகைக்கடை பூட்டை உடைத்து ரூ.45 ஆயிரம் திருட்டு

விக்கிரவாண்டியில் மளிகைக்கடை பூட்டை உடைத்து ரூ.45 ஆயிரம் திருட்டு நடந்தது.

Update: 2023-05-10 18:45 GMT

விக்கிரவாண்டி:

விக்கிரவாண்டி அருகே உள்ள சித்தணி கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன்(வயது 42). இவர், விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று காலை மளிகைக்கடையில் 3 பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்த அப்பகுதி ஆட்டோ டிரைவர்கள், அன்பழகனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் விரைந்து வந்து பார்த்தபோது, நள்ளிரவில் மர்மநபர்கள் கடை பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து ரூ.45 ஆயிரத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் விக்கிரவாண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன், சப்-இன்ஸ்பெக்டர்கள் பிரகாஷ், காத்தமுத்து ஆகியோர் நேரில் வந்து கடையை பார்வையிட்டனர். இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்