ஓடும் பஸ்சில் ரூ.10 ஆயிரம் திருட்டு; 3 பெண்கள் கைது
ஓடும் பஸ்சில் ரூ.10 ஆயிரம் திருட்டு; 3 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி ஓ பாலம் எஸ்.எஸ்.நகரை சேர்ந்தவர் சண்முகவேல். இவருடைய மனைவி சாந்தி (வயது 50). இவர் நேற்று முன்தினம் காலை சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து மத்திய பஸ் நிலையத்துக்கு பஸ்சில் பயணம் செய்தார். கோர்ட்டை அடுத்து வ.உ.சி. சிலை பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, சாந்தி வைத்திருந்த கைப்பையை 3 பெண்கள் திருடினர். அந்த கைப்பையில் ரூ.10 ஆயிரம் இருந்தது. இதை கண்ட சாந்தி அதிர்ச்சி அடைந்து 3 பெண்களையும் பயணிகள் உதவியுடன் பிடித்து செசன்ஸ் கோர்ட்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, பஸ்சில் திருடிய தென்காசியை சேர்ந்த முத்துலெட்சுமி (35), முத்துமாரி (34), சுப்புலெட்சுமி45) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.