பாத்திரக்கடை உரிமையாளர் வீட்டில் ரூ.5½ லட்சம் திருட்டு
பாத்திரக்கடை உரிமையாளர் வீட்டில் ரூ.5½ லட்சம் திருட்டுபோனது தொடர்பாக வேலைக்கார பெண் கைது செய்யப்பட்டார்.
திருவெறும்பூர்:
பாத்திரக்கடை உரிமையாளர்
நவல்பட்டு அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் தினேஷ்பாபு(வயது 40). இவர் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் திருச்சி எடமலைப்பட்டிபுதூர் ரேஷன் கடை தெருவை சேர்ந்த திலகா (32) என்பவரை வீட்டு வேலை செய்வதற்காக கடந்த 10-ந் தேதி நியமித்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று இரவு தினேஷ்பாபு ரூ.5 லட்சத்து 65 ஆயிரத்தை தனது ஸ்கூட்டரில் உள்ள பெட்டியில் வைத்து பூட்டிவிட்டு, ஸ்கூட்டரை தனது வீட்டில் நிறுத்தி இருந்தார். மறுநாள் காலையில் ஸ்கூட்டரில் இருந்த பணத்தை காணவில்லை.
கைது
இதுகுறித்த புகாரின்பேரில் நவல்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், திலகா பணத்தை எடுத்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து பணத்தை மீட்டனர்.