ஜவுளிக்கடையில் ரூ.48 ஆயிரம் திருட்டு

ஜவுளிக்கடையில் ரூ.48 ஆயிரம் திருட்டு் போனது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது

Update: 2022-10-25 20:11 GMT

பட்டுக்கோட்டை தலையாரி தெருவில் ஜவுளிக்கடை நடத்தி வருபவர் முகமது இக்பால். இங்கு தீபாவளியையொட்டி நேற்று முன்தினம் அதிகாலை வரை வியாபாரம் நடந்துள்ளது. பின்னர் ஜவுளிக்கடையை பூட்டிவிட்டு முகமது இக்பால் வீட்டிற்குச் சென்று விட்டார். இந்தநிலையில் நேற்று காலை கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் கடையை திறந்து கொண்டு உள்ளே சென்றனர். அப்போது அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா உடைந்து கீழே கிடந்தது கண்டு திடுக்கிட்டனர். கேமராவில் உள்ள ஹார்ட் டிஸ்க்கும் திருட்டு போய் இருந்தது. மேலும் கல்லாவில் வைக்கப்பட்டிருந்த ரூ. 48ஆயிரம் திருட்டுப் போய் இருந்தது. ஜவுளிக் கடையின் பின்புற மாடி கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதுகுறித்து பட்டுக்கோட்டை நகர போலீசில் முகமது இக்பால் புகார் அளித்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி, சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டதோடு இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்