பொம்மை வியாபாரி வீட்டில் ரூ.45 ஆயிரம் திருட்டு

பொம்மை வியாபாரி வீட்டில் ரூ.45 ஆயிரம் திருட்டுபோனது.

Update: 2023-03-14 19:20 GMT

வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெங்கனூரை சேர்ந்தவர் ராஜா(வயது 40). பொம்மை வியாபாரி. இவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார். பின்னர் நேற்று வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கு பீரோவில் வைத்திருந்த ரூ.45 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இது குறித்து ராஜா அரும்பாவூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்