சத்துணவு அமைப்பாளர் வீட்டில் ரூ.29 ஆயிரம் திருட்டு

சத்துணவு அமைப்பாளர் வீட்டில் ரூ.29 ஆயிரம் திருட்டு போனது.

Update: 2023-09-16 19:30 GMT

ஓமலூர்:-

ஓமலூர் அடுத்த கணவாய் புதூர் ஊராட்சி லேண்ட் காலனியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 46). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி மங்கம்மாள் (40). சத்துணவு அமைப்பாளராக உள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று மங்கம்மாள் பள்ளிகூடத்துக்கு சென்று விட்டார். சிவக்குமார் அருகில் உள்ள மற்றொரு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார்.

இதையறிந்த மர்ம நபர்கள் வீட்டின் ஓட்டை பிடித்து உள்ளே இறங்கினர். பின்னர் மேஜை டிராயரில் வைத்திருந்த ரூ.29 ஆயிரத்தை திருடி சென்றனர். பின்னர் பள்ளியில் இருந்து திரும்பிய மங்கம்மாள் வீட்டில் வந்து பார்த்தபோது வீட்டின் ஓடு பிரிக்கப்பட்டு பணம் திருட்டு போனதை அறிந்தார். இதுகுறித்து சிவக்குமார் தீவட்டிப்பட்டி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்