லாரி அதிபர் அலுவலகத்தில் ரூ.2½ லட்சம் திருட்டு

லாரி அதிபர் அலுவலகத்தில் ரூ.2½ லட்சம் திருட்டு போனது.

Update: 2022-12-22 21:54 GMT

சூரமங்கலம்:

சேலம் கந்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார். லாரி அதிபர். இவரது அலுவலகம் கந்தம்பட்டி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகில் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம்போல் ஆனந்தகுமார் அலுவலகத்தை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை அலுவலகத்திற்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அவர் உள்ளே சென்று பார்த்த போது, பீரோ திறந்து இருந்தது. அதில் இருந்த ரூ.2 லட்சத்து 60 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது, இது குறித்த புகாரின் பேரில் சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்