திட்டக்குடியில் தனியார் மருத்துவமனையில் ரூ.17 ஆயிரம் திருட்டு
திட்டக்குடியில் தனியார் மருத்துவமனையில் ரூ.17 ஆயிரம் திருடுபோனது குறித்து போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திட்டக்குடி,
திட்டக்குடி மெயின் ரோட்டில் தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் ஊழியர்கள் மருத்துவமனை ஷட்டரை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றனர். பின்னர் நேற்று காலை மருத்துவமனையை திறப்பதற்காக ஊழியர்கள் வந்தனர். அப்போது ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது, மேஜையில் வைத்திருந்த ரூ.17 ஆயிரத்தை காணவில்லை. அதை யாரோ மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் திட்டக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூ.17 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்