மார்த்தாண்டம் அருகே ஓட்டலில் பூட்டை உடைத்து ரூ.15 ஆயிரம் திருட்டு

மார்த்தாண்டம் அருகே ஓட்டலில் பூட்டை உடைத்து ரூ.15 ஆயிரம் மற்றும் பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2023-05-15 18:45 GMT

குழித்துறை:

மார்த்தாண்டம் அருகே ஓட்டலில் பூட்டை உடைத்து ரூ.15 ஆயிரம் மற்றும் பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

ஓட்டலில் திருட்டு

மார்த்தாண்டம் அருகே உள்ள மருதங்கோடு கூட்டமாவிளையை சேர்ந்தவர் ஸ்ரீகுமார் (வயது 54). இவர் புத்தன்சந்தை சந்திப்பில் கடந்த 32 ஆண்டுகளாக ஓட்டல் நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று இரவு 9.30 மணியளவில் வியாபாரம் முடிந்த பின்பு வழக்கம்போல் ஓட்டலை மூடிவிட்டு ஸ்ரீகுமாரும், கடை ஊழியர்களும் வீட்டுக்கு சென்றனர். பின்னர் மறுநாள் அதிகாலை 5 மணிக்கு ஓட்டலை திறக்க கடை ஊழியர் சம்பு வந்தாா். அப்போது ஓட்டலின் பின்பக்க ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.

ரூ.15 ஆயிரம் திருட்டு

இதனால் அதிர்ச்சியடைந்த கடை ஊழியர் இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் ஸ்ரீகுமாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே அவர் ஓட்டலுக்கு வந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது ஓட்டலில் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் ரொக்கம் மற்றும் கண்காணிப்பு கேமரா போன்ற பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து ஸ்ரீகுமார் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் வினீஷ் பாபு வழக்குப்பதிவு செய்து ஓட்டலில் திருடிய மர்ம நபர்களை தேடி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்