பெட்டிக்கடையின் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரம் திருட்டு

பெட்டிக்கடையின் பூட்டை உடைத்து ரூ.10 ஆயிரம் திருட்டு நடந்தது.

Update: 2022-08-20 18:16 GMT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள முகமதுபட்டிணத்தை சேர்ந்தவர் அப்துல்கரீம். இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது பெட்டிக்கடையில் நேற்று முன்தினம் இரவு மர்மநபர்கள் பூட்டை உடைத்து கடைக்குள் இருந்த ரூ.10 ஆயிரத்தை திருடி சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக அப்துல்கரீம் கொடுத்த புகாரின்பேரில் அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்