கட்டிட மேஸ்திரி வீட்டில் ரூ.1¼ லட்சம் திருட்டு

கட்டிட மேஸ்திரி வீட்டில் ரூ.1¼ லட்சம் திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-08-10 17:45 GMT

குடியாத்தத்தை அடுத்த கூட நகரம் ஊராட்சி பார்வதியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மதியழகன், கட்டிடமேஸ்திரி. இவரது மனைவி அஞ்சலி. கூலி வேலை செய்கிறார். தினமும் கணவன்- மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால் வீட்டை பூட்டி சாவியை ஜன்னல் மேல் வைத்து விட்டு செல்வது வழக்கம். நேற்று காலையில் வழக்கம் போல் கணவன்- மனைவி இருவரும் வீட்டை பூட்டிக் கொண்டு வேலைக்கு சென்றுள்ளனர். மாலையில் வீட்டுக்கு வந்தபோது வீட்டின் கதவு பூட்டு இல்லாமல் திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். உள்ளே சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் ஜன்னல் மீது வைத்திருந்த சாவியை எடுத்து கதவை திறந்து உள்ளே சென்று பீரோவை திறந்து அதில் வைத்திருந்த ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்தை திருடி சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து மதியழகனின் மனைவி அஞ்சலி குடியாத்தம் தாலுகா போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி மேற் பார்வையில், சப்- இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் சென்று திருட்டு சம்பவம் நடைபெற்ற வீட்டில் விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்