கோழிப்பண்ணையில் ரூ.1 லட்சம் பொருட்கள் திருட்டு
ரெட்டிச்சாவடி அருகே கோழிப்பண்ணையில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடுபோனது.
ரெட்டிச்சாவடி,
ரெட்டிச்சாவடி அருகே உள்ள பெரியகாட்டுபாளையத்தை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 68). இவர் அதேபகுதியில் கோழிப்பண்ணை நடத்தி வந்தார். தற்போது ஒரு மாதமாக கோழிப்பண்ணை செயல்படாமல் பூட்டப்பட்டிருந்தது. சம்பவத்தன்று நள்ளிரவில் கோழிப்பண்ணையின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் அங்கிருந்த 33 மின்விசிறிகள், 2 மின் மோட்டார்களை திருடிச் சென்று விட்டனர். திருடு போன பொருட்களின் மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும்.
இதுகுறித்து ராமதாஸ் கொடுத்த புகாரின்பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து, பொருட்களை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.