ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.1 லட்சம் திருட்டு
ஓடும் பஸ்சில் பெண்ணிடம் ரூ.1 லட்சம் திருடப்பட்டது.
நெல்லை அருகே தாழையூத்து நிக்கில் நகரை சேர்ந்தவர் ராபர்ட் மனைவி உமா ஜெயந்தி (வயது 37). இவர் குடும்பத்துடன் அந்தமானில் வசித்து வருகிறார். அங்கு அவர் நர்சாக பணியாற்றி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த உமா ஜெயந்தி நேற்று காலையில் திசையன்விளையில் உள்ள தனது உறவினருக்கு ரூ.1 லட்சம் கொடுப்பதற்காக நெல்லை புதிய பஸ்நிலையத்துக்கு சென்ற பஸ்சில் தாழையூத்து பகுதியில் ஏறினார். வண்ணார்பேட்டை வந்த போது அங்கு பெண்கள் கூட்டம் அதிகமாக பஸ்சில் ஏறியுள்ளது. பின்னர் அங்கிருந்து நெல்லை புதிய பஸ்நிலையத்திற்கு வந்து இறங்கினார். அப்போது அவர் பையில் வைத்து இருந்த ரூ.1 லட்சம் திருடப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து அவர் பாளையங்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.