மோட்டார் சைக்கிள்கள் திருட்டு
கோவில்பட்டியில் மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் காளிராஜ் (வயது 48). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக வேலை பார்த்து வருகிறார். இவர் வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு காலையில் பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருட்டு போய் இருந்தது தெரியவந்தது.
இதேபோல் கோவில்பட்டி தனுஷ்கோடியாபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மனோஜ் குமார் (32). இவர் வீட்டிற்கு முன்பு இரவு மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு காலையில் பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
இந்த சம்பவங்கள் குறித்து தனித்தனியாக கோவில்பட்டி கிழக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.