சாத்தூர்,
சாத்தூர் அருகே உள்ள வெங்கடாசலபுரம் கே.கே. நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராமானுஜம் (வயது 62). இவர் அந்த பகுதியில் உள்ள விநாயகர் கோவிலை பராமரித்து வந்துள்ளார். இந்தநிலையில் வழக்கம் போல் இரவில் கோவிலை பூட்டி விட்டு சென்றார். பின்னர் மறுநாள் காலையில் பூஜைக்காக கோவிலை திறக்கும் போது கோவிலில் உள்ள உண்டியல் மற்றும் பைரவர் சிலை மீது வைக்கப்பட்டிருந்த செம்பு சூலாயுதம், எமர்ஜென்சி விளக்குகள் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.