பனியன் நிறுவனத்தில் பணம் திருட்டு

பனியன் நிறுவனத்தில் பணம் திருட்டு போனது.

Update: 2023-09-10 21:57 GMT

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டி ஜவகர் இணை தெருவை சேர்ந்தவர் முத்துசாமி (வயது 46). இவர் சொந்தமாக பனியன் நிறுவனம் வைத்து நடத்தி வருகின்றார். இந்த நிலையில் இவருடைய பனியன் நிறுவனம் திறந்து கிடப்பதாக நேற்று மாலை அக்கம்பக்கத்தினர் முத்துசாமியிடம் கூறினார். பின்னர் அவர் இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். அப்போது பீரோவில் இருந்த ரூ.80 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்