கோவில் உண்டியலில் பணம் திருட்டு
விக்கிரமசிங்கபுரத்தில் கோவில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை மர்மநபர் திருடிச் சென்றார்.
விக்கிரமசிங்கபுரம்:
விக்கிரமசிங்கபுரம் மேட்டுபாளையம் தெருவில் சக்தி விநாயகர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு மர்ம நபர் ஒருவர் கோவில் உண்டியலை உடைத்து, அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் சுப்பையா, சங்கரன், சீனிவாசன் ஆகியோர் அளித்த புகாரின் பேரில் விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.