தாயில்பட்டி
ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள ரெட்டியபட்டியை சேர்ந்தவர் குருசாமி. இவர் ஏழாயிரம் பண்ணையில் இருந்து சாத்தூர் செல்லும் மெயின் ரோட்டில் சைக்கிள் உதிரிபாகங்கள் விற்பனை செய்யும் கடை வைத்துள்ளார். வழக்கம்போல் கடையை திறக்க சென்றபோது கடையின் மேற்கூரை உடைந்து இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக கல்லாவை பார்த்த போது அதில் உள்ள ரூ. 11 ஆயிரம் திருட்டு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதேபோல கடையின் அருகில் உள்ள ஜோதிராஜ் என்பவரது மரக்கடையிலும் மேற்கூரையை உடைத்து கடையில் இருந்த ரூ.5 ஆயிரத்தை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து இவர்கள் 2 பேர் அளித்த புகாரின் பேரில் ஏழாயிரம் பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.