பல்பொருள் அங்காடியில் பணம் திருட்டு
நெல்லையில் பல்பொருள் அங்காடியில் பணம் திருடிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை ரெட்டியார்பட்டி பால்பண்ணை சிவசக்தி நகரைச் சேர்ந்தவர் இசக்கி மனைவி ராமபிரியா (வயது 35). இவர்கள் தெற்கு புறவழிச்சாலை பகுதியில் பல்பொருள் அங்காடி (சூப்பர் மார்க்கெட்) நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவில் கடை ஊழியர் கடையை அடைத்து விட்டு சென்றுவிட்டார். நேற்று காலையில் அவர் கடையை திறக்க வந்தபோது ஷட்டர் திறக்கப்பட்டு இருந்தது. அதைக் கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ராமபிரியா மேலப்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கடைக்குள் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அப்போது அங்கிருந்த ரூ.15 ஆயிரம் திருட்டு போனது தெரியவந்தது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
மேலும் அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.