வியாபாரி வீட்டில் நகை, பணம் திருட்டு
தாரமங்கலம் அருகே வியாபாரி வீட்டில் நகை பணம் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தாரமங்கலம்:-
தாரமங்கலம் அருேக உள்ள குறுக்குப்பட்டி கிராமம் பவளத்தானூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 37). இவர் மளிகை பொருட்களை சந்தையில் வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். இதைநோட்டமிட்ட மர்ம நபர்கள் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த ரூ.4 லட்சம் ெராக்கம், 24 பவுன் தங்க நகைகளை திருடிச்சென்று விட்டதாக பிரகாஷ் தாரமங்கலம் போலீசில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.