வீட்டில் நகை, பணம் திருட்டு
திசையன்விளை அருகே வீட்டில் நகை, பணம் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திசையன்விளை:
திசையன்விளை அருகே உள்ள சிவந்தியாபுரத்தை சேர்ந்தவர் கணேசன். கார் டிரைவர். இவருடைய மனைவி அம்மாபொன்னு (வயது 32). சம்பவத்தன்று கணேசன் வேலைக்கு சென்றுவிட்டார். அம்மா பொன் வீட்டு கதவை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டார். பின்னர் வீடு திரும்பிய அவர் வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 3 பவுன் தங்க நகை, ரூ.3,500 ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து திசையன்விளை போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் உதயலட்சுமி வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகிறார்.