விருதுநகர் என்.ஜி.ஓ. காலனி நேரு தெருவில் வசிப்பவர் ரவிச்சந்திரன். இவர் தனியார் விடுதி கணக்கராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு தன் குடும்பத்தினருடன் வெளியே சென்று விட்டார். பின்னர் இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டு கதவு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த 7 பவுன் நகை, ரூ. 10 ஆயிரம் ஆகியவை திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இதுபற்றிய புகாரின்பேரில் விருதுநகர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.