பெண்ணிடம் பாலிஷ் செய்வதாக கூறி நகை திருட்டு

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண்ணிடம் நகை பாலிஷ் செய்வதாக கூறி நகையை திருடிய வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் பிடிபட்டனர்.

Update: 2023-06-02 19:11 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர், 

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெண்ணிடம் நகை பாலிஷ் செய்வதாக கூறி நகையை திருடிய வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் பிடிபட்டனர்.

நகைக்கு பாலிஷ்

ஸ்ரீவில்லிபுத்தூர் சீனியாபுரம் தெருவை சேர்ந்தவர் சவரியம்மாள் (வயது 45). இவர் வீட்டில் இருக்கும் பொழுது 2 பேர் வந்து தங்க நகை பாலிஷ் போட்டு தருகிறோம் என கூறினார். இதைத்தொடர்ந்து அவர் தனது கழுத்தில் இருந்த தாலி செயினை கழட்டி பாலிஷ் செய்து கொடுக்க கூறியுள்ளார்.

அவர்கள் 2 பேரும் நகை பாலிஷ் செய்து கொடுத்தபோது, தங்க நகை லேசாக இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த சவரியம்மாள் அவர்களிடம் கேட்டபோது 2 பேரும் தப்பி ஓட முயன்றனர்.

2 பேரிடம் விசாரணை

இதுகுறித்து அருகில் இருந்தவரிடம் கூறினார். இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்கள் 2 பேரையும் பிடித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசில் ஒப்படைத்தனர்.

அவர்களிடம் போலீசாா் விசாரணை நடத்திய போது வடமாநிலத்தை சேர்ந்த மிதுன்குமார், சர்வன் குமார் என்பதும் சவரியம்மாளிடம் நகையை பாலிஷ் போடுவதாக கூறி அவரிடம் இருந்த 32 கிராம் செயினில் இருந்த 6 கிராம் செயினை வெட்டி எடுத்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்