பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணின் நகை, பணம் திருட்டு

ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்படட் பெண்ணின் நகை, பணம் திருட்டு போனது. இதுகுறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-07-04 13:33 GMT

ஊட்டி

ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்கு அனுமதிக்கப்படட் பெண்ணின் நகை, பணம் திருட்டு போனது. இதுகுறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிரசவத்திற்கு அனுமதி

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியை சேர்ந்தவர் பழனிச்செல்வம். இவர் கேரளாவில் கூலித்தொழியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கோகிலம் (வயது 25). இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி கோகிலத்திற்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் ஊட்டி சேட் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் நேற்று அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. இதனால் கோகிலத்தின் உறவினர்கள், அவரது கழுத்தில் இருந்த 4 கிராம் தங்க நகை, ரூ.4 ஆயிரம் ஆகியவற்றை கழற்றி சிறிய பையில் வைத்து, அங்குள்ள ஓரிடத்தில் வைத்துவிட்டு சென்றனர்.

விசாரணை

இதையடுத்து சிறிது நேரம் கழித்து வந்து பார்த்த போது அந்த பையை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அங்கும், இங்கும் தேடினர். ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. மர்மநபர் யாரோ அந்த பையை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட கோகிலத்தில் உறவினர்கள் ஊட்டி மத்திய போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்