தோட்டத்தில் மின்வயர் திருட்டு
கூடலூர் அருகே தோட்டத்தி்ல் மின்வயர் திருட்டுபோனது.
கூடலூர் காமாட்சி அம்மன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் பால் பாண்டியன் (வயது 65). விவசாயி. இவருக்கு சொந்தமான தோட்டம் லோயர்கேம்ப் வைரவன் அணை பகுதியில் உள்ளது. நேற்று முன்தினம் இவர், தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார். அப்போது தோட்டத்தில் உள்ள மின் மோட்டாரில் இணைக்கப்பட்டிருந்த சுமார் 300 மீட்டர் நீள மின் வயர் திருடுபோய் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் லோயர்கேம்ப் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மூவேந்தன் வழக்குப்பதிவு செய்து மின் வயரை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகிறார்.