மின்மோட்டார்கள் திருட்டு; 2 பேர் கைது

திசையன்விளை அருகே மின்மோட்டார்கள் திருடிச் சென்றதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-10-20 19:24 GMT

திசையன்விளை:

திசையன்விளையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான தோட்டத்தில் ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் மதிப்பிலான மின்மோட்டார்கள் மற்றும் மின்சார உபகரணங்களை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டதாக அந்த நிறுவனத்தின் மேலாளர் ஸ்ரீராமன் திசையன்விளை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மகாதேவன்குளம் மேலத்தெருவை சேர்ந்த லிங்கத்துரை (வயது 40), மருதநாச்சிவிளை ராஜன் (44) ஆகியோரை கைது செய்தார். அவர்களிடம் இருந்து திருட்டு போன பொருட்களை போலீசார் மீட்டனர். மேலும் திருட்டு வழக்கில் தொடர்புடையவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்