இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த பணம் திருட்டு

இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்த பணம் திருட்டு போனது.

Update: 2023-08-17 19:03 GMT

ராஜபாளையம்,

ராஜபாளையம் வள்ளலார் தெருவை சேர்ந்தவர் காசிலிங்கம் (வயது 62). இவர் தென்காசி சாலையில் உள்ள ஒரு வங்கியில் அவரது கணக்கில் உள்ள ரூ.45 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு இரு சக்கர வாகனத்தில் பெட்டியில் வைத்தார். பின்னர் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க காமராஜ் நகர் பகுதியில் உள்ள கடைக்கு சென்றார். பொருட்களை வாங்கி விட்டு பின்னர் வீடு திரும்பினார். அப்போது பெட்டியை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த ரூ.45 ஆயிரம் மற்றும் காசோலை ஆகியவற்றை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்