அரசு பள்ளியில் புத்தக பண்டல்கள் திருட்டு

அரசு பள்ளியில் புத்தக பண்டல்கள் திருடியவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Update: 2023-09-07 20:09 GMT

பேட்டை:

நெல்லையை அடுத்த பேட்டையில் காமராஜர் நகர் மன்ற மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பயன்படுத்தபடாத வகுப்பறை குடோனில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படுவதற்காக புத்தகங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. இந்த குடோன் பூட்டு நேற்று முன்தினம் உடைக்கப்பட்ட நிலையில் அங்கிருந்த 28 புத்தக பண்டல்கள் திருட்டு போனது.

இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலர் பேட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்து, மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்