ரூ.1 லட்சம் மதிப்பிலான மோட்டார் சைக்கிள் திருட்டு
ரூ.1 லட்சம் மதிப்பிலான மோட்டார் சைக்கிள் திருடு போனது.
விழுப்புரம் சந்தானகோபாலபுரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 34). சம்பவத்தன்று இவர், தனது விலையுயர்ந்த மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். மறுநாள் காலை பார்த்தபோது அந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சமாகும்.
இதுகுறித்து மணிகண்டன், விழுப்புரம் நகர போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் திருடர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.