மோட்டார் சைக்கிள் திருட்டு
அம்மாப்பேட்டை அருகே ே மாட்டார் சைக்கிள் திருட்டு
அம்மாப்பேட்டை:
அம்மாப்பேட்டை அருகே உள்ள ராராமுத்திரக்கோட்டை கிராமம் தெற்கு தெருவில் வசித்து வருபவர் அழகேசன் மகன் ஜீவா (வயது26). விவசாயி. சம்பவத்தன்று இரவு ஜீவா தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். மறு நாள் காலையில் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. மர்ம நபர்கள் அதை திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஜீவா கொடுத்த புகாரின் பேரில் அம்மாப்பேட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.