என்ஜினீயர் வீட்டில் 7¾ பவுன் நகைகள் திருட்டு
என்ஜினீயர் வீட்டில் 7¾ பவுன் நகைகள் திருட்டுபோனது.
நகைகள் திருட்டு
திருச்சி கருமண்டபம் ஜெயாநகர் விஸ்தரிப்பு பகுதியை சேர்ந்தவர் சீனிவாசகுமார்(வயது 46). சிவில் என்ஜினீயரான இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டிவிட்டு நாச்சிக்குறிச்சியில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு சென்றார்.
இந்நிலையில் அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர், வீட்டில் இருந்த 7¾ பவுன் நகைகளை திருடி சென்றார். நேற்று முன்தினம் வீடு திரும்பிய சீனிவாசன், வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக வீட்டினுள் சென்று பார்த்தபோது, நகைகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இது குறித்து அவர் செசன்ஸ் கோர்ட்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.