3 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு

3 மோட்டார் சைக்கிள்கள் திருட்டப்பட்டுள்ளது.

Update: 2022-11-13 18:30 GMT

திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள மாவளிபட்டி பகுதியை சேர்ந்தவர் திருப்பதி (வயது 34). இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளை குளித்தலை அரசு மருத்துவமனை முன்பு நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார். பின்னர் மீண்டும் வந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதேபோல குளித்தலை அருகே உள்ள தெற்கு மையிலாடி பகுதியைச் சேர்ந்த கருப்பையா (43) என்பவர் சம்பவத்தன்று தனது வயலுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். குளித்தலை அருகே உள்ள கல்லுப்பட்டி வாய்க்கால் பாலம் பகுதியில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வயலுக்குச் சென்றுவிட்டு பின்னர் மீண்டும் வந்து பார்த்தபோது அவரது மோட்டார் சைக்கிைள காணவில்லை.

இதேபோல குமாரமங்கலம் பகுதியைச் சேர்ந்த சர்மா (36) என்பவர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு விவசாய நிலத்திற்கு சென்றுள்ளார். இதையடுத்து அவர் மீண்டும் வந்து பார்த்தபோது அவர் நிறுத்தி இருந்த இடத்தில் அவரது மோட்டார் சைக்கிளும் காணவில்லை.

இதுகுறித்து 3 பேரும் தனித்தனியாக குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்