2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு

நெல்லை அருகே 2 மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டது.

Update: 2023-05-05 19:00 GMT

நெல்லை அருகே முன்னீர்பள்ளம் இளையாமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் தளவாய். இவரது மகன் சுப்பிரமணியன். லாரி டிரைவரான இவர் தனது மோட்டார் சைக்கிளை அடைமிதிப்பான்குளம் விலக்கு பகுதியில் நிறுத்தி இருந்தார். அந்த மோட்டார் சைக்கிளை மர்மநபர் திருடி சென்றுள்ளார்.

அதே போல் முன்னீர்பள்ளம் ஜோதிபுரத்தை சேர்ந்த ஆரோக்கியம் என்பவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தாா். அந்த மோட்டார் சைக்கிளையும் மர்மநபர் திருடி சென்றுள்ளார். இந்த 2 சம்பவங்கள் குறித்தும் முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்