2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு

2 மோட்டார் சைக்கிள்கள் திருட்டு

Update: 2022-09-10 19:49 GMT

தஞ்சையை அடுத்த நாஞ்சிக்கோட்டையை சேர்ந்தவர் அப்துல் சலாம் (வயது 32). சம்பவத்தன்று இவர் மருத்துவக்கல்லூரி வளாகத்தில் தன்னுடைய மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு சென்று விட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பல்வேறு இடங்களில் தேடிபார்த்தும் அது கிடைக்கவில்லை. அப்போது மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தஞ்சை மருத்துவக்கல்லூரி போலீஸ் நிலையத்தில் அப்துல் சலாம் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்தழகன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதேபோல் தஞ்சை பெரிய கோவில் வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி இருந்த கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த சரத் சிவராம் (59) என்பவரின் மோட்டார் சைக்கிளை மர்மநபர்கள் திருடிசென்று விட்டனர். இதுகுறித்து சரத் சிவராம் அளித்த புகாரின் பேரில் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்