வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகை திருட்டு

வீட்டின் பூட்டை உடைத்து 19 பவுன் நகை திருட்டு

Update: 2022-10-26 18:45 GMT

சரவணம்பட்டி

கோவை விளாங்குறிச்சி மூகாம்பிகை நகர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (வயது54). இவர் சரவணம்பட்டியில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் தீபாவளி அன்று காலை குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று விட்டு இரவு 11 மணிக்கு வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 19 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சண்முகசுந்தரம் கோவில்பாளையம் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்