பூட்டிய வீட்டில் 12 பவுன் நகை திருட்டு

பூட்டிய வீட்டில் 12 பவுன் நகை மர்மநபர்களால் திருடப்பட்டது.

Update: 2023-07-19 18:45 GMT

சிவகங்கை தொண்டி ரோடு பகுதியில் வசிப்பவர் சீனியப்பா. இவர் மலேசியாவில் வசிக்கிறார். இவரது மனைவி ரஷியா பானு (வயது 41) குழந்தைகளுடன் சிவகங்கையில் இருக்கிறார். நேற்று காலை ரஷியா பானுவின் மகன் பள்ளிக்கு சென்று விட்டார். ரஷியா பானு தன்னுடைய மகளை அழைத்துக் கொண்டு மதுரை சென்று விட்டு மதியம் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பின் கதவை உடைத்து உள்ளே புகுந்து 12 பவுன் நகை மற்றும் ரூ.35 ஆயிரம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்று இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் சிவகங்கை நகர் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்