மில் தொழிலாளி வீட்டில் 10 பவுன் நகைகள் திருட்டு

மில் தொழிலாளி வீட்டில் 10 பவுன் நகைகள் திருடு போனது.

Update: 2022-09-19 19:00 GMT

வடமதுரை அருகே உள்ள கொல்லப்பட்டி முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 38). தனியார் மில் தொழிலாளி. இவருக்கு சுகந்தி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். நேற்று காலையில் ரவிச்சந்திரன் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். குழந்தைகள் பள்ளிக்கு சென்றுவிட்டனர். இதையடுத்து சுகந்தி வீட்டை பூட்டிவிட்டு பக்கத்தில் உள்ள தோட்டத்துக்கு சென்றுவிட்டார்.

சுகந்தி வீட்டைவிட்டு வெளியே செல்லும் போது வீட்டை பூட்டி சாவியை ஜன்னல் அருகே மறைவான இடத்தில் வைத்துவிட்டு செல்வது வழக்கம். இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் அந்த சாவியை எடுத்து வீட்டை திறந்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவில் இருந்த நகைகளை திருடிக்கொண்டு தப்பிச்சென்றுவிட்டனர்.

மாலையில் வீட்டுக்கு திரும்பிய சுகந்தி, கதவு திறந்த நிலையில் இருப்பதை பார்த்து பதற்றமடைந்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள் திருடு போனதையறிந்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் இதுகுறித்து வடமதுரை போலீசில் அவர் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்