கோவிலில் திருட்டு: மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
கோவிலில் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வாங்கல் அருகே சங்கரம்பாளையம் கிராமத்தில் புதுவன்னியம்மன் கோவில் உள்ளது. இக்ேகாவில் பூசாரி கடந்த 17-ந்தேதி வழக்கம்போல் பூஜையை முடித்து விட்டு இரவு கோவிலை பூட்டி விட்டு சென்றார். பின்னர் மறுநாள் காலை வந்து பார்த்த போது கோவிலில் இருந்த பித்தளை குடம், சில்வர் பாத்திரங்கள், குடத்தினால் ஆன உண்டியல் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து பூசாரி கொடுத்த புகாரின்பேரில் வாங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் உதயகுமார் வழக்குப்பதிந்து, கோவிலில் திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்.