நித்திரவிளை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

நித்திரவிளை அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடி செல்லப்பட்டது.

Update: 2022-11-02 21:31 GMT

கொல்லங்கோடு:

நித்திரவிளை காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட சக்தி தர்மபுரம் பகுதியில் முருகன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான உண்டில்கள் கோனசேரி, புதுக்குளம் பகுதியிலும், கோவிலின் வெளிப்புறத்திலும், கோவில் உட்பகுதியிலும் என நான்கு உண்டியல்கள் உள்ளன. இந்தநிலையில், யாரோ மர்ம நபர் ஒருவர் நேற்று முன்தினம் இரவு முருகன் கோவிலின் முன்புறம் மற்றும் வெளிபுறம் உள்ள உண்டியல்களை உடைத்து சுமார் ரூ.10 ஆயிரத்தை திருடி சென்றுள்ளார். நேற்று காலையில் கோவிலுக்கு வந்த பொதுமக்கள் உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்ததை பாா்த்து கோவில் தலைவர் கேசரி என்பவருக்கு தகவல் கொடுத்தனர். அவர் நித்திரவிளை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்து கோவிலின் முன்பக்கம் சிறிது தூரத்தில் நிறுத்திவிட்டு நடந்து வந்து கோவிலின் முன்பக்கம் மற்றும் உள்பக்கம் உள்ள உண்டியல்களை உடைத்து திருடும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதைதொடர்ந்து அதன்அடிப்படையில் மர்ம நபரை போலீசார் ேதடி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்