கடையில் பணம் திருட்டு; 2 பேர் கைது

நெல்லையில் கடையில் பணம் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-12-01 19:31 GMT

நெல்லை பேட்டை திரிபுரசுந்தரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நம்பி சிவன் (வயது 48). இவர் பாளையங்கோட்டை மங்கம்மாள் சாலையில் நெய் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் ரூ.1,500-ஐ திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து நம்பி சிவன் பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் வழக்குப்பதிவு செய்து, தூத்துக்குடி ரகுமத்துல்லாபுரத்தை சேர்ந்த கந்தாசிவா (20) மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 2 பேரை நேற்று கைது செய்தார்.


Tags:    

மேலும் செய்திகள்