6 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருட்டு
6 கடைகளின் பூட்டை உடைத்து பணம் திருடிய மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.
நாகை மாவட்டம் திட்டச்சேரியில் உள்ள பழக்கடை, இறைச்சி கடை, காய்கறி கடை, பழைய இரும்பு கடை, ஓட்டல் உள்ளிட்ட 6 கடைகளில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம நபர்கள் பூட்டை உடைத்து பணத்தை திருடி உள்ளனர். இதுகுறித்து வியாபாரிகள் சங்கம் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கடைகளின் பூட்டை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். ஒரே நாள் இரவில் அடுத்தடுத்து 6 கடைகளின் பூட்டு உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டு இருப்பது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.