3 கோவில்களில் உண்டியல் பணம், நகை திருட்டு

தட்டார்மடம் அருகே 3 கோவில்களில் உண்டியல் பணம், நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றனர்.

Update: 2022-07-04 11:25 GMT

தட்டார்மடம்:

தட்டார்மடம் அருகே பனைவிளையில் உள்ள செல்வவிநாயகர் கோவில் மற்றும் இசக்கியம்மன் கோவிலில் சம்பவத்தன்று இரவு கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த உண்டியலை உடைத்து பணத்தை திருடி உள்ளனர். இதேபோல் நடுவக்குறிச்சியில் உள்ள முத்தாரம்மன் கோவிலில் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள், அங்கு பணம், நகை எதுவும் கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் படுக்கப்பத்து கால்நடை மருத்துவமனை அருகில் உள்ள இசக்கியம்மன் கோவிலில் மர்மநபர்கள் புகுந்து, ¼ பவுன் எடையுள்ள தங்க பொட்டு, தாலியை திருடி உள்ளனர். இதுதொடர்பாக தட்டார்மடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குரூஸ் மைக்கேல் வழக்குப்பதிவு செய்தார். கோவில்களில் கைவரிசை காட்டிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்