விவசாயி வீட்டின் சுவரில் துளையிட்டு திருட்டு

கொடைக்கானல் அருகே, விவசாயி வீட்டின் சுவரில் துளையிட்டு சோலார் பொருட்கள் திருடப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2022-11-21 17:07 GMT

கொடைக்கானல் அருகே பண்ணைக்காடு, ஆலடிபட்டியை சேர்ந்தவர் சஷ்டிகணேஷ் முரளி. விவசாயி. இவருக்கு சொந்தமான காபி தோட்டம் பண்ணைக்காடு-வாழகிரி இடையே செக்கேடில் என்ற பகுதியில் உள்ளது. தோட்டத்துக்குள் வனவிலங்குகள் புகாமல் இருக்க தோட்டத்தை சுற்றி சஷ்டிகணேஷ் முரளி சோலார் மின்வேலி அமைத்துள்ளார். இதற்காக தோட்டத்து வீட்டில் சோலார் பேனல், பேட்டரி, இன்வெர்ட்டர் உள்ளிட்ட மின்சாதன பொருட்களை வைத்திருந்தார்.

இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் சஷ்டிகணேஷ் முரளி தனது தோட்டத்துக்கு சென்றார். அப்போது தோட்டத்து வீட்டின் சுவரில் துளைபோடப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டை திறந்து பார்த்தபோது, உள்ளே வைத்திருந்த சோலார் பேனல், பேட்டரி, இன்வெர்ட்டர் உள்ளிட்டவை மாயமாகி இருந்தது. மர்மநபர்கள் வீட்டின் சுவரில் துளையிட்டு மின்சாதன பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து சஷ்டிகணேஷ் முரளி தாண்டிக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்