தேவதானப்பட்டி அருகே கோவிலில் பொருட்கள் திருட்டு
தேவதானப்பட்டி அருகே கோவிலில் பொருட்கள் திருடுபோனது.
தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி மட்டமலை அடிவாரத்தில் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவில் ஜன்னலை உடைத்து, உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் கோவிலுக்குள் இருந்த 4 குத்து விளக்குகள் மற்றும் பூஜை பொருட்களை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
இதற்கிடையே மறுநாள் கோவிலுக்கு வந்த பூசாரி, அங்கு ஜன்னல் உடைக்கப்பட்டு, பொருட்கள் திருடுபோனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதேபோல் கெங்குவார்பட்டியில் உள்ள காளத்தீஸ்வரர் கோவிலில் கதவை உடைத்து திருட்டு முயற்சி நடந்துள்ளது. இதுகுறித்த புகாரின்பேரில் தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.