மூங்கிலம்மன் கோவிலில் திருட்டு
திருநாவலூர் அருகே மூங்கிலம்மன் கோவிலில் நடந்த திருட்டு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநாவலூர்,
திருநாவலூர் அருகே குன்னத்தூர் கிராமத்தில் மூங்கிலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்தனர். பி்ன்னர் அவர்கள் அங்கு அம்மன் கழுத்தில் கிடந்த 3 பவுன் நகையை திருடிக்கொண்டு சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் திருநாவலூர் இன்ஸ்பெக்டர் அசோகன்,சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் குப்பம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக சென்ற 2 பேரை போலீசார் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் போலீசாரை பார்த்ததும், அங்கிருந்து தப்பி ஓடினர். இதையடுத்து அவர்களை போலீசார் விரட்டிச் சென்று பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் குன்னத்தூர் மூங்கிலம்மன் கோவிலில் நடந்த திருட்டில் ஈடுபட்டவர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.