விருதுநகரில் ஜவுளிக்கடையில் திருட்டு

விருதுநகரில் ஜவுளிக்கடையில் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-01-28 19:23 GMT


விருதுநகர் மேலரதவீதியில் ஜவுளி கடை வைத்திருப்பவர் விவேக் (வயது 30). இவர் வழக்கம் போல் இரவில் கடையை பூட்டி விட்டு சென்றார். பின்னர் மறுநாள் காலையில் வந்து பார்த்த போது கடையின் கதவுகள் சேதப்படுத்தப்பட்டு இருந்தது. இதையடுத்து உள்ளே சென்று பார்த்த போது கடையில் இருந்த ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள ஆயத்த ஆடைகள் திருட்டு போயிருந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து இந்நகர் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்