2 ஆடுகள் திருட்டு

2 ஆடுகள் திருட்டு போனது.

Update: 2023-06-12 18:45 GMT

ராமநாதபுரம் அருகே உள்ள புத்தேந்தல் பகுதியை சேர்ந்த வேலு மகன் பூமிநாதன் (வயது 48). விவசாயியான இவருக்கு சொந்தமான 2 ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு கட்டி போட்டிருந்தார். பிற்பகலில் திரும்பி சென்று பார்த்தபோது ஆடுகளை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் இதுகுறித்து ராமநாதபுரம் நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்