மத்தூர்:
மத்தூர் அருகே கொத்தகோட்டை கிராமத்தில் பெருமாள் கோவில் உள்ளது. சமீபத்தில் இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. நேற்று முன்தினம் பூசாரி வழக்கம்போல் கோவிலை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். நேற்று காலை வந்து பார்த்தபோது, கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் மத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.