ராமலிங்க சுவாமிகள் மடத்தில் இன்வெர்ட்டர்- பேட்டரி திருட்டு

ராமலிங்க சுவாமிகள் மடத்தில் இன்வெர்ட்டர்- பேட்டரி திருட்டு போனது.

Update: 2023-04-18 19:15 GMT

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே பாடகச்சேரி கிராமத்தில் பைரவ சித்தர் என்று பக்தர்களால் அழைக்கப்படும் ராமலிங்க சுவாமிகள் மடம் உள்ளது. நூற்றாண்டு பழமையான இந்த மடத்தில் ஆண்டுதோறும் ஆடிப்பூரம் மற்றும் தைப்பூச தினத்தன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். இங்கு உள்ள அன்னதான கூடத்தில் வைக்கப்பட்டிருந்த பேட்டரி மற்றும் இன்வெர்ட்டர் உள்ளிட்ட மின்சாதனங்களை மர்ம நபர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக திருடிச்சென்றனர். இதுகுறித்து வலஙகைமான் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்